states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் வர்மா

அரசாங்கத்தின் மீதான விமர்சனம் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். அதே போல நீதித்துறையும் விமர்சிக்க முடியும். இதில் தவறு கிடையாது. 

பிகேயு விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்

உத்தரப்பிரதேச காவல்துறை பிலிபிட் மாவட்டத்தில் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்களை குறிவைக்கிறது. அதாவது சீக்கியர்கள் இல்லாத பகுதியாக தேராய் பகுதியை உருவாக்க முயற்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு நடந்தால் பிரம்மாண்ட போராட்டம் நடத்துவோம்.

தில்லி எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி

தில்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் மொத்தம் 8 அத்தியாயங்கள் உள்ளன. அதில் முதல் 7 அத்தியாயங்கள் தில்லியின் பழைய கலால் கொள்கை பற்றியே உள்ளன. பாஜக ஆளும் ஹரியானா மற்றும் உ.பி.,யில் இருந்து தில்லிக்கு மதுபானம் கடத்தப்படுவதாக முந்தைய ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டியது. இன்று இந்த அறிக்கை அதற்கு முத்திரை பதித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்

ராஜஸ்தான் சட்டமன்றத்தை நடத்த பாஜக அரசாங்கம் விரும்பவில்லை. அதனால் இந்திரா காந்தி பெயரை கூறி தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கியும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்தும் வருகிறது.