தேனி, பிப்.25- தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களி லிருந்து பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. 159 கல்வி நிறுவனங்க ளுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப் படும் திட்டங்கள் குறித்த கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச. தலைமை யிலும், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செய லர் வா.சம்பத், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் மற்றும் மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர்கள் நாகூர் எ.எச்.நஜ்முதீன், பிரவீன்குமார் டாடியா, ராஜேந்திர பிரசாத், எம். ரமீட்கபூர், ஜெ.முகமது ரபி, எஸ். வசந்த் ஆகியோர் முன்னிலையி லும் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேனி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் சுயதொழில் தொடங்க தலா ரூ.15,000 வீதம் 25 முஸ்லிம் மகளிருக்கு ரூ.3,75,000க்கான காசோலைகளையும், கிறிஸ்தவ உபதேசியர்கள் மற்றும் பணியா ளர்கள் என 7 நபர்களுக்கு நல வாரிய அட்டையினை மாநில சிறு பான்மையினர் ஆணைய தலை வர் வழங்கினார். பின்னர் மாநில சிறுபான்மை யினர் ஆணைய தலைவர், செய்தி யாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது: இதுவரை ஆய்வு மேற்கொள் ளப்பட்டுள்ள 10 மாவட்டங்களிலி ருந்து பெறப்பட்ட 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. 159 கல்வி நிறுவனங்க ளுக்கு நிரந்தர சிறுபான்மையினர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெறப்பட்ட மனுக்களில் சிறு பான்மையினரின் 60 சதவீத கோரிக் கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள் ளது. இக்கூட்டத்தில் கிறித்துவர் களின் கல்லறை தோட்டம் மற்றும் முஸ்லிம்களின் கபர்ஸ்தான் குறித்தும், ஆலயத்துடன் இணைந் துள்ள கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் குறித்தும் எழுப்பப் பட்ட கோரிக்கைகளுக்கு தேனி மாவட்ட அலுவலர்களுடன் கலந்து ரையாடி தீர்வு காண்பதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆலயங்கள் மற்றும் கல்ல றைகளுக்கு பட்டா வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய் யப்படும் என மாநில சிறுபான்மை யினர் ஆணைய தலைவர் தெரி வித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிர சாத், மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலெட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், இஸ்லாமிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், கிறிஸ்தவ பேராலயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.