தில்லியில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
சமீபத்தில் நிறைவு பெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி யை கைப்பற்றியது. முதலமைச்ச ராக ரேகா குப்தாவும், துணை முதலமைச்ச ராக பர்வேஷ் வர்மா மற்றும் 5 அமைச் சர்கள் பொறுப்பேற்ற னர். திங்கள்கிழமை அன்று தேர்தலில் வெற்றி பெற்ற எம் எல்ஏக்கள் பொறுப் பேற்றனர். சபாநாயகராக விஜயேந்தர் குப்தா பொறுப்பேற்றார். இந்நிலையில், பாஜக ஆட்சி அமைத்தவுடன் தில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரின் படங்கள் வைக்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக செவ்வாய்க் கிழமை அன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தி னார்கள். எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலை வருமான அதிஷி, முன்னாள் அமைச்சர் கோபால் ராய் உள்பட 21 எம்எல்ஏக்க ளை ஒருநாள் இடைநீக்கம் செய்து சபா நாயகர் விஜயேந்தர் குப்தா உத்தர விட்டார்.