districts

img

மின்வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்

மதுரை, பிப்.25- மின்வாரியத்தை பொதுத் துறையாக பாதுகாத்திட கோரியும்; மின்வாரியத்தில் ஆரம்பக் கட்ட காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்பிட கோரியும்; ஊதிய உயர்வு, வேலைபளு பேச்சு வார்த்தையை உடனடியாக  துவக்கிட கோரியும்; இடைக் கால நிவாரணமாக ரூ.5,000 வழங்கிட கோரியும்; புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை வழங்கிட கோரி யும்; 1.12.2019 முதல் 16.5. 2023 வரை மின்வாரியப் பணி யில் சேர்ந்தவர்களுக்கு 6 சத வீத ஊதிய உயர்வு வழங் கிட கோரியும்; கேங்மேன் பணியாளர்களை கள உதவி யாளராக பதவி மாற்றம் செய்திட கோரியும்; ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்  திட கோரியும்; ஸ்மார்ட் மீட்  டர் திட்டத்தை புகுத்தாதே என கோரியும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் செவ்வாயன்று மின்வாரிய  அலுவலகங்கள் முன்பு   நடைபெற்றது.  மதுரை அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மதுரை,  மதுரை பெருநகர், ஜிசிசி மதுரை கிளைகள் சார்பில் மதுரை கோ.புதூரில் உள்ள  மின்வாரிய தலைமை பொறி யாளர் அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலை வர் எஸ்.திருமுருகன் தலைமை வகித்தார். தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.குரு வேல் துவக்கி வைத்து பேசி னார். பின்னர் தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்  பின் மதுரை புறநகர் கிளை  திட்டச் செயலாளர் சி.செல்வ ராஜ், புறநகர் பொருளாளர் ஆர்.சுரேஷ்குமார், மதுரை  மாநகர் கிளை பொருளா ளர் என்.குழந்தைவேல்  ஆகி யோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். சிஐடியு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், மதுரை மாநகர்  மாவட்டச் செயலாளர் இரா. லெனின், தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி. பிச்சைராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன மதுரை மண்  டல உதவித் தலைவர் ஜி. ராஜேந்திரன், எல்ஐசி மதுரை  கோட்ட பொதுச் செயலா ளர் என்.பி.ரமேஷ் கண்ணன்  ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். நிறைவு செய்து தமிழ்  நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மாநிலச் செய லாளர் எஸ்.உமாநாத் பேசி னார். மதுரை கிளை மாவட்ட இணைச் செயலாளர் பி. மாயத்தேவன் நன்றி கூறினார். இந்த தர்ணா போராட் டத்தில் மின் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.