முஸ்லிம் மக்களை புறந்தள்ள “மல்ஹர்” சான்றிதழ் மகாராஷ்டிர பாஜக அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் நடத்தி வரும் இறைச்சி கடைகளை ஒழிக்க “மல்ஹர்” என்ற சான்றிதழை அறிமுகம் செய்து ள்ளது அம்மாநில பாஜக கூட்டணி அரசு. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவ ரும், மகாராஷ்டிரா மீன்வளத்துறை அமைச்சருமான நிதேஷ் ரானே தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”மல்ஹர் சான்று மூலம் 100% சரியான ஆட்டி றைச்சி கடைகளைத் தேர்வு செய்ய முடியும். ஏனென்றால் இந்தக் கடைகள் 100% இந்துக்களால் நடத்தப்படுகிறது. எனவே கூடுமான வரை மல்ஹர் சான்றிதழ் இருக்கும் கடைகளில் மட்டுமே ஆட்டிறைச்சி வாங்குங்கள். மற்ற கடை களில் வாங்க வேண்டாம். மல்ஹர் சான்றி தழ் மகாராஷ்டிராவில் வாழும் இந்துக்க ளுக்கான முக்கியமான ஒருபடியாகும். அவர்களின் பொருளாதாரம் மேம்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. வலுக்கும் கண்டனம் மல்ஹர் சான்றிதழ் மூலம் மகா ராஷ்டிராவில் மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் மூடி மறைத்து வகுப்பவாத வன்முறையை தூண்ட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ள தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலே கூறுகை யில்,”மல்ஹர் சான்றிதழ் விவகாரம் சமூ கத்தை பிளவுபடுத்தும் செயல் ஆகும். இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரச்சனையை ஏற்படுத்தவே “மல்ஹர்” சான்றிதழ் என்ற திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. இது மாநிலத்தின் அமைதி க்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதே போல மகா விகாஸ் அகாதி கட்சிகளும் மல்ஹர் சான்றிதழ் விவகாரத்திற்கு கண்ட னம் தெரிவித்து வருகின்றன.