சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
2024 மக்களவைத் தேர்தலிலேயே பாஜக தோற்கடிக்கப்பட்டு விட்டது. 2027 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக மிக மோசமான அளவில் தோல்வியை சந்திக்கும். அதற்கான வேலைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பக்தர்கள் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தது, போதிய ரயில் வசதிகள் ஏற்பாடு செய்யாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானது, கோபத்தில் ரயில் பெட்டிகள் உடைக்கப்பட்டது என ரயில்வே துறையின் மிக அவலமான காலமாக தற்போதைய ஒன்றிய அரசின் காலம் மாறிவருகிறது.
திரிணாமுல் மூத்த தலைவர் குணால் கோஷ்
பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி வன்முறைக்காக மேற்கு வங்க மக்களைத் தூண்டிவிடுகிறார். மேற்கு வங்கத்தில் இந் துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் உள்ளனர். ஆனால் ஹோலி பண்டிகையை வைத்து மதவன்முறை அரசி யல் மேற்கொள்வது சரியானது அல்ல.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் சிங் ராவத்
தமிழ்நாடு அரசுக்கு புதிய கல்விக் கொள்கை குறித்து சில கவலைகள் உள்ளன. மாநிலங்களின் கவலைகளை தீர்ப்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு தனக்கு சாதகமான யோசனையை திணிக்க முயற்சிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. கூட்டாட்சியில் மாநில அரசின் கவலைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக எதையும் கட்டாயப்படுத்த முடியாது.