states

தீக்கதிர் விரைவு செய்திகள்

8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவில் பங்குச் சந்தைகள்

வாரத்தின் முதல் வணிக நாளான திங்களன்று இந்திய பங்குச் சந்தை கள் வணிகம் சரிவுடன் முடிவடைந் தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 856.66 புள்ளிகள் சரிந்து 74,454,41 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.  மொத்த வணிகத்தில் இது 1.14 சதவீதம் சரிவாகும். அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 243.40 புள்ளிகள் சரிந்து 22,552,50 புள்ளி களாக நிறைவுபெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.07 சதவீதம் சரிவாகும். அதிகபட்சமாக தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் 3% வரை சரிந்தன. அதே போல நிப்டி பட்டியலில் ஆட்டோ, நுகர் வோர் பொருள்கள் துறை மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இது கடந்த 8 மாதங் களில் இல்லாத அளவு சரிவாகும்.

தில்லியில் ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து தில்லி இந்திரா காந்தி சர்வ தேச விமான நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணின்  உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்துள்ள னர். இந்த சோதனையில் 8 பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் அரிசி பாக்கெட்டு களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 11,284 கிராம் அளவிலான பச்சை நிற முள்ள பொருள்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் பச்சை நிறமுள்ள பொருள்கள் கஞ்சா போன்ற போதைப்பொருள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த போதைப் பொருளின் மதிப்பானது ரூ.11.28 கோடி என சுங்க அதிகாரிகள் தகவல் தெரி வித்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதே சத்தின் நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.