ஒன்றிய அரசின் புறக்கணிப்பைக் கண்டித்து தில்லியில் எல்டிஎப் பகலிரவு போராட்டம்
கேரளத்தின் வயநாடு மாவட் டம் முண்டக்கை சூரல்மலை நிலச்சரிவுப் பேரிடருக்கு உத வாத ஒன்றிய அரசின் பாராமுகத்தைக் கண்டித்து தில்லியில் பகல் இரவு போ ராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) நடத்தியது. சிபிஎம் வயநாடு மாவட்டக்குழு தலை மையில் பிப்.24 திங்களன்று இப்போரா ட்டம் துவங்கியது. இதையொட்டி தில்லி கேரள இல்லத்தில் தொடங்கிய போராட் டத்தை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் விஜுகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஒன்றிய அரசின் புறக்கணிப்பு நீடித்தால் போராட்டம் தீவிரமடையும் என தலைவர்கள் தெரி வித்தனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரி வித்து ஆம் ஆத்மி கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கும் பங் கேற்றார். வயநாடு மக்கள் தனித்து விடப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.