பிரம்மாண்டமாக நடைபெற்ற சிபிஎம் தானே-பால்கர் மாவட்ட மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தானே-பால்கர் (மகாராஷ்டிரா) மாவட்ட 24ஆவது மாநாடு ஜவ்ஹரில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே மாநாட்டை துவங்கி வைத்து உரையாற்றினார். புதிய மாவட்டக்குழுவின் செயலாளராக கிரண் கஹாலா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.