முக்கியப் பொருளாதாரத் துறைகளில் குறையும் வளர்ச்சி
புதுதில்லி இந்திய பொருளாதாரத்தின் அடிப்ப டையாக உள்ள எட்டு முக்கி யத் துறைகளில் வளர்ச்சி வீழ்ச்சிய டைந்துள்ளதாக ஒன்றிய அரசின் தர வுகள்படி தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதம் 3 சதவீத அளவிற்கு இத்துறைகளின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருள் துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும், உரங் கள் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்த துமே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என கூறப் படுகிறது. மந்தநிலையின் பின்னணி வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட எட்டு முக்கியத் தொழில்களின் குறியீட்டுத் தரவுகளில் 2024 செப்டம்பர் மாதத்தை விட 2025 செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகமாக காட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த செப்டம்பர் மாதம் பதி வாகியுள்ள வீழ்ச்சியானது நடப்பாண்டின் ஜூன் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான அளவாக உள்ளது. துறை வாரியான வீழ்ச்சி மற்றும் மந்தம் 2025 ஆகஸ்ட் மாதம் 11.4 சதவீதமாக இருந்த நிலக்கரித் துறை செப்டம்பர் மாதம் 1.19 ஆக குறைந்து 9 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்த 2.6 சதவீத வளர்ச்சியை விடக் குறைவாகும். 2025 கடந்த ஆகஸ்ட் மாதம் 2.4 சதவீத மாக இருந்த கச்சா எண்ணெய் துறை செப் டம்பர் மாதம் 1.25 சதவீதம் வீழ்ச்சியடைந் துள்ளது. 2025 இல் எட்டு மாதங்களில் ஆகஸ்ட் மாதம் தான் இத்துறை முதல் வளர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது. இதே போல இயற்கை எரிவாயுத் துறை தொடர்ந்து 15 மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ஏற் பட்ட வீழ்ச்சி சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் துறை வீழ்ச்சியை சந்திக்க காரணமாகி யுள்ளது.