தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தக்கோரி சாலை மறியல்
தருமபுரி, அக்.22- சீலநாயக்கனூர் பகுதியில் தொலைத்தொடர்பு வசதியின்மை யின் காரணமாக கிராம மக்கள் பல் வேறு சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில், அப்பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே தொன்னகுட்ட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட சீலநாயக்க னூர், ஊர் நத்தம், பேகியம் புதுக் காடு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைகள் சூழ்ந்த பகுதிக்கு இடைப்பட்டதில் இக்கிரா மங்கள் அமைந்துள்ளதால், போது மான தொலைத்தொடர்பு வசதி கிடைப்பதில் பொதுமக்களுக்கு சிர மம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, நியாய விலை கடைகளில் முறை யாக ரேசன் பொருட்கள் பெறுவதற் கும், கிராம நிர்வாக அலுவலகங்க ளில் சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பிப்பது, பள்ளிக்குழந்தை களுக்கு தினசரி பாடங்கள் கற்பிப் பது குறித்து குறுஞ்செய்திகள், அவ சர தேவைகளுக்கு தகவல் கொடுப் பது உள்ளிட்ட பல்வேறு வகையான இணைய வழி செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். சீலநாயக் கனூர் பகுதியில் தொலைத்தொ டர்பு வசதி ஏற்படுத்தித்தர வேண் டும் என பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை. மேலும், சீலநாயக்கனூர் பகுதி யில் அடிப்படை வசதிகள், பென்னா கரம் பகுதியில் இருந்து சீலநாயக்க னூர் பகுதிக்கு பழைய வழித்தடத் தில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை தொடங்க வேண்டும். தடையற்ற தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீலநாயக்கனூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புத னன்று சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தகவலறிந்த பிஎஸ் என்எல் மாவட்ட இணை மேலாளர் பிரபு துரை, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன், வட்டாட்சியர் சண்முக சுந்தரம், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா ஆகியோர் அடங்கிய குழுவினர் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது, சீலநாயக்கனூர் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற் கான கோப்புகள் அனுப்பப்பட்டு அவை நிலுவையில் உள்ளதாக வும், விரைவில் ஆணை பெற்று தொலைதொடர்பு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்கா லிகமாக கிராம நிர்வாக அலுவல கம், நியாய விலை கடையில் இணைய வசதி பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், சீலநாயக்கனூர் பகுதி யில் அடிப்படை வசதிகள், பழைய வழித்தடத்தில் பேருந்து சேவை மேற்கொள்ள வேண்டி மனுக்கள் வழங்கினர். இதில் உடன்பாடு ஏற் பட்டதால், மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.