tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தனியார் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.22- தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்தைத் தமி ழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியு றுத்தி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியாருக்கு முழு மையாக மாற்ற வகைசெய்யும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டத்தை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது பேசியவர்கள், தமிழக அரசு சமூக நீதிக்கு எதிரான குற்றத்தைச் செய்திருப்பதாகவும், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட இந்த தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம், ஏழை மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும்  வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய சட்டத்தால் பாரம் பரியமிக்க அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏழை மாண வர்கள் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்படும். அரசு உதவி பெறும் கல்லூரிகள் அனைத்தும் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிவிடும் பட்சத்தில், கல்விக் கட்டணத்தை தனியார் பல்க லைக்கழகங்கள் மட்டுமே நிர்ணயிக்கும் நிலை ஏற்படும். இத னால், சாதாரண கட்டணத்தில் ஏழை மாணவர்கள் தரமான  கல்வியைப் பெறும் வாய்ப்பு பறிபோகும், என்றனர். ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் தலைவர் வே.ஈஸ்வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

ஈரோடு, அக்.22- கோபிசெட்டிப்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளியன்று (நாளை) சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இனைந்து, வெள்ளியன்று (நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கோபி செட்டிப்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. உயர்கல்வி தொடர்வதற்கும், கல்விக்கடன்களை எளிதில் பெறுவதற்கும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவி கள் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல், பான் கார்டு, சாதிச்சான்று, பொற்றோரின் ஆண்டு  வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்விச் சான்று, மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ், கலந்தாய்வு கடிதம், நுழைவுத்தேர்வு முடிவுகள், கல்லூரி  சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று மற்றம் உறுதிமொழி சான்று ஆகியவற்றுடன் https://pmvidyalaxmi.co.in என்ற இணைதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

45 பவுன் நகை கொள்ளை

கோவை, அக்.22- வெள்ளலூரில் பேராசிரியர் ஒருவர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோவை மாவட்டம், வெள்ளலூர் அருகே உள்ள இந்திரா நகர் மேகா ராலி தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகா சம் (35). இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு கடந்த 18  ஆம் தேதியன்று ஞானப்பிரகாசம் வீட்டை பூட்டி விட்டு  திண்டுக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து போத்தனூர் போலீஸாருக்கு தக வல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிடைத்த தகவலின் அடிப்படையில், தப்பிய நபர்களை தேடி  வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது

நாமக்கல், அக்.22- 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 63 வயது முதியவர் போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு பகுதியை சேர்ந்தவர் மணிவா சகம் (63). எலக்ட்ரிக்கல் வேலை உதவி யாளராக உள்ளார். இவர் பக்கத்து வீட் டில் வசித்து வரும் தறி தொழிலா ளர்களின் 4 ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை பொங்கல் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாலியல் சீண்டலுக்குள் ளான பெண் குழந்தை பெற்றோரி டம் கூறவே, பெற்றோர் செவ்வாயன்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த னர். அதன்பேரில் திருச்செங்கோடு ஊரக போலீசார் தோக்கவாடிக்கு சென்று மணிவாசகத்தை கைது  செய்து, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காவல் நிலையத்திற் குட்பட்ட லக்காபுரம், புதுவலசைச் சேர்ந்த சாமிநாதன் (56) என்பவர், 10 ஆம்  வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு போக்சோ வழக்குப்பதிவு செய்யப் பட்டு, சாமிநாதனை போலீசார் கைது  செய்தனர். ஈரோடு மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த இந்த வழக் கில், போக்சோ குற்றத்திற்கு 20 ஆண்டு கள் தண்டனையும், பாலியல் வல்லு றவு குற்றத்திற்கு 20 ஆண்டுகள் தண்ட னையும், கொலை மிரட்டல் குற்றத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை என ஏக  காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என வும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்து  புதனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4  லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண் டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பத்தின் மீது கார் மோதி விபத்து

கோவை, அக்.22- கோவை காந்திபுரம் அருகே அதிகாலை நடந்த விபத்தில், கார் மோதியதால் ஒரு மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின் இணைப்பு முழுவதுமாக தடைபட்டது. கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் வேகமாக வந்த வாடகை கார் ஒன்று, கட் டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்வாரியத்துக்குச் சொந்தமான உயர் மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் சாலையில் சாய்ந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, கார்  ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பி னார். விபத்து நடந்தவுடன், அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப் பட்டது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த  காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். இதை யடுத்து, சுமார் 12 மணி நேரப் போராட்டத் திற்கு பின், சாய்ந்த மின் கம்பம் முழுவது மாக மாற்றப்பட்டு, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் 300-க்கும் மேற் பட்ட வீடுகளுக்கு தடைபட்ட மின்சாரம் மீண்டும் கிடைத்தது.