வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருப்பூர், அக்.22- திருப்பூர் மாநகராட்சி மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங் கள் மற்றும் நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே புதனன்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்புக் குள்ளாகும் இடங்களாக மொத்தம் 41 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சங்கிலி பள்ளம் ஓடை, ஜமானை ஓடை, நொய்யல் ஆறு ஆகிய பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கண்டறி யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகு திகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் பொழுது பொதுமக்களை தங்க வைப்பதற்காக 52 நிவாரண முகாம் கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலை யில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே திருப்பூர் மாநக ராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால ஒருங் கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சிக் குட்பட்ட சங்கிலி பள்ளம் ஓடை, ஜமானை ஓடை, நொய்யல் ஆறு, சந்தைப்பேட்டை அம்பேத்கர் நகர் ஓடை, நல்லாறு மற்றும் காந்தி நகர் ஓடை ஆகிய பகுதிகளை நேரில் பார்வை யிட்டார். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந் தார்கள். மேலும், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், மழை வெள் ளம் தேங்கிய கருமாபளையம் ஓடை, நடுவஞ்சேரி ஊராட்சி பகுதிகள், மாரப்பாளையம் குட்டை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் எம்.பி. அமித், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், திருப் பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
