பிஎஸ்என்எல் ஓய்வதியர் சங்க அமைப்பு தின கருத்தரங்கம்
ஈரோடு, அக்.22- பிஎஸ்என்எல் ஓய்வதியர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, புதனன்று ஈரோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூ தியர் சங்க அமைப்பு தின கருத்தரங்கம், அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு நிகழ்வு ஈரோடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சின்னசாமி தலைமை வகித்தார். ‘நமது அமைப்பும், ஓய்வூதியமும்’ என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜசேகர் மற்றும் ‘இந்திய அரசியலமைப்பு சட்டமும், ஓய்வூதியர் கட மைகளும்’ என்ற தலைப்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேசன் அகில இந்திய இணைச்செயலாளர் எம்.கிரிஜா ஆகியோர் கருத்துரையாற்றினர். சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் என்.குப்புசாமி, எல்.பரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதைத்தொடர்ந்து, அகில இந்திய மாநாட்டு நிதியாக மாநிலச் செயலாளரிடம் ரூ.2.50 லட்சம் வழங்கப்பட் டது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் (பொ) எம்.நடராஜன், பொருளாளர் ஜி.வெங்கடே சன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.