தொடர் மழை: தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு
உதகை, அக்.22- நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் கடுங்குளிர் நிலவி வருவதால், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. நீலகிரி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் திருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்க ளுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழையா னது தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப் பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மித மான முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு கள் மற்றும் சாலைகளில் சிறு சிறு மண் சரிவுகள் ஏற்பட்டும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், செவ்வாயன்று நள்ளிரவு முதல் மீண்டும் உதகை, குன் னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகி றது. இதனிடையே, தீபாவளி பண்டிகை மற்றும் நான்கு நாட்கள் தொடர் விடுமு றைக்குபின் பள்ளி, கல்லூரிகள் புதனன்று திறக்கப்பட்டதால், கொட்டும் மழையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். காற்றுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, பைன் ஃபாரஸ்ட், 8 ஆவது மைல், ட்ரீ பார்க், தொட்டபெட்டா, அவலாஞ்சி மற்றும் கேரன்ஹில் ஆகிய சூழல் சுற்றுலாத் தலங்கள் புதனன்று தற்காலிகமாக மூடப் பட்டது. மேலும், தொடர் மழையால் குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், தொடர்ந்து மூன்றாவது நாளாக மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை வெடி வைத்து அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையான பணிகள் முடிவடைந்தவுடன் மலை ரயில் இயக்கப் படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக தோட்டத் தொழிலா ளர்கள், விவசாயிகள், சுற்றுலாத் தொழிலா ளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.