குட் ஷெப்பர்ட் பள்ளியில் ஆண்டு விழா
உதகை, அக்.22- உதகை அருகே உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியின் நிறுவன ஆண்டு விழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள குட் ஷெப்பர்ட் சர்வதேச பள்ளியின் ஆண்டு நிறுவன தின விழா புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக வழக்கறிஞரும், விளையாட்டு ஆர்வலருமான நந்தன் காமத், சந்த்யா குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சியில், மாணவர்களின் அணிவகுப்பு, இசைக்குழு நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மலை ஏற்ற திறமைகள் மற்றும் குதிரைச்சவாரி பார்வையாளர் களை கவரும் வகையில் இருந்தது. குறிப்பாக, குதிரையில் சவாரி செய்தவாறு தரையில் வைக்கப்பட்ட தகடுகளை ஈட்டியால் குத்தி எடுத்தல், தடைகளை தாண்டுதல் உள்ளிட்ட சாகசங்களை செய்து மாணவர்கள் அசத்தினர். மேலும், 100 அடி உயரத்தில் கம்பியை பிடித்து தொங்கியவாறு ஒரு முனை யிலிருந்து மறு முனைக்கு செல்லுதல், தலை கீழாக கம்பி யில் கீழே இறங்குவது உள்ளிட்ட மலையேற்ற சாகசங்களை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பேக் பைப்பர் இசையுடன் நடைபெற்ற அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் ஜேக்கப் தாமஸ், துணைத்தலைவர் சாரா ஜேக்கப், பள்ளி நிர்வாகி வினோத் சிங், தலைமையாசிரியை தீபா சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.