states

img

இந்தி ஆய்வாளரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்த பாஜக அரசு

இந்தி ஆய்வாளரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்த பாஜக அரசு

புகழ்பெற்ற இந்தி மொழி ஆய்வா ளரான பிரான்செஸ்கா ஓர்சினியை இந்தியாவிற்குள் காலடி வைக்க விடாமல் தில்லி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.  இவரை ஒன்றிய பாஜக அரசு கரும்புள்ளிப் பட்டியலில் வைத்துள்ளது. எனவே அவரை திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் பிறந்த பிரான்செஸ்கா ஓர்சினி, இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் இந்தி மற்றும் தெற்காசிய இலக்கியப் பேராசிரியராக உள்ளார். மேலும் லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்துள்ளார். ஆனால், விமான நிலையத்தில் அவரைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து, அவரை மீண்டும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பினர். ‘எவ்வித காரணமும் தெரிவிக்கப் படாமல் ஓர்சினி திருப்பி அனுப்பப் பட்டுவிட்டார்’ என்று அவரது கணவர் பீட்டர் கார்னிக்கி கூறியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குக் கல்வியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.  இதுகுறித்து வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கருத்து தெரிவிக்கை யில், ‘ஒன்றிய அரசின் செயல் முட்டாள் தனமானதாக உள்ளது’ என்று கடு மையாகச் சாடியுள்ளார்.