பத்திரிகையாளர் பர்கா தத்
ஏன் சில செய்தி தொலைக்காட்சிகள் அரசியல் குறித்து ஜோதிடர்களிடம் கருத்து கேட்கின்றன? தேர்தல்கள், ஜாதகம் கொண்டு கணிக்கப்படுகிறதா அல்லது ஊடகத்துறை, சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்த்துச் செயல்படுகிறதா?
கேரள காங்கிரஸ் சமூகதளப் பக்கம்
அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நினைவிருக்கிறதா? ஹசாரேவும் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஊழலுக்கு எதிரான தனி அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்பு வேண்டுமென போராடினார்கள். லோக்பால் அமைப்போ, ஒன்றிய அரசு இன்று நடத்திக் கொண்டிருக்கும் கொள்ளையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணி ஷங்கர் அய்யர்
வெளியுறவு கொள்கையை தனியொரு நபரின் விஷயமாக கருதக் கூடாது. ஒன்றிய அரசு செய்துள்ள அடிப்படை தவறு இது. அனைவரையும் வெறுமனே கட்டி அணைத்துக் கொண்டு, ‘உலகிலேயே நீங்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறீர்கள்’ என சொல்வது அபத்தம்.
பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்
சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்படாததற்குக் காரணம் அவரது மதம் என்று கூறுவது முற்றிலும் கேலிக்கூத்தானது. கிரிக்கெட் மைதானத்திற்குள் விஷம் நிறைந்த மதவாதப் பேச்சுகளைக் கொண்டு வர வேண்டாம்.