states

img

பொதுக் கல்வியைப் பாதுகாக்க கர்நாடகத்தில் எஸ்எப்ஐ பிரச்சாரம்

பொதுக் கல்வியைப் பாதுகாக்க கர்நாடகத்தில் எஸ்எப்ஐ பிரச்சாரம்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பொ துக் கல்வியைப் பாது காக்க இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) மாநில அள விலான பிரச்சாரத்தை தொடங்கி யது.  தாவணகரேயில் உள்ள அரசு முதல்தரக் கல்லூரியில் திங்க ளன்று தொடங்கிய இந்த பிரச்சார அணிவகுப்பை எஸ்எப்ஐ அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சஜி தொடங்கி வைத்தார். இந்த பிரச்சார அணிவகுப்பு, மாநி லத்தின் பல்வேறு மையங்களில் சுற்றுப்பயணம் செய்து நவம்பர் 28 அன்று அவேரியில் முடிவடை கிறது. “பொதுக் கல்வியைப் பாது காப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படு கிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் பொதுக் கல்வியை வணிக மயமாக்கவும், சந்தைப்படுத்தவும், மையப்படுத்த முயற்சிக்கும் பாஜக வின் மாணவர் விரோத ஆட்சிக்கு எதிராகவும், கர்நாடகாவில் காங்கி ரஸ் அரசின் மாணவர் விரோத நிலைப்பாட்டிற்கு எதிராகவும் இந்தப் பிரச்சார அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள எஸ்சி- எஸ்டி மற்றும் ஓபிசி உதவித் தொகைகளை உடனடியாக வழங்குதல், கர்நாடகாவில் சுமார் 4,000 மூடப்பட்ட அரசுப் பள்ளிக ளைத் திறத்தல், விடுதிகளில் மாண வர்களுக்கு போதுமான வசதி களை உறுதி செய்தல், காலியாக உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பணி யிடங்களில் ஆசிரியர்களை உட னடியாக நியமித்தல், பொதுக்  கல்வித் துறையைப் பாதுகாத்தல், பெல்லோஷிப் தொகைகளை (ஆய்வு உதவித்தொகை) அதி கரித்தல் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்தப் பிரச்சாரம் எழுப்புகிறது. எஸ்எப்ஐ மாநிலத் தலைவர் சிவப்பா அபாலிக்கல், மாநிலச் செயலாளர் விஜயகுமார் டி.எஸ். உள்ளிட்ட பலர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட னர்.