states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்

பீகார் மக்கள் பாஜக - ஜேடியு அரசுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றும் பணி பீகார் தேர்தலில் இருந்து தொடங்கும். இது ஒரு வரலாற்று தேர்தலாக உருவெடுக்கப் போகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

ஹரியானாவில் தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இது ஒரு குடும்பத்தைப் பற்றி மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தலித் மக்களைப் பற்றியது. நான் பிரதமர் மற்றும் ஹரியானா முதலமைச்சரிடம் கூற விரும்புவது ஒன்றே ஒன்று தான். இந்த விவகாரம் தொடர்பாக இப்போதே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்ஜேடி எம்.பி., சுதாகர் சிங்

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தலித் சமூக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் சாதிரீதியிலான துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பலர் வேலையில் இருந்து ராஜினாமா செய்கிறார்கள். இதெல்லாம் ஆர்எஸ்எஸ் கருத்தியல் செல்வாக்குள்ள நபர்கள் அதிகாரத்திற்கு வரும்போது தான் நிகழ்கிறது.

மூத்த பத்திரிகையாளர் ராணா அய்யூப்

புகழ்பெற்ற காசா பத்திரிகையாளரும், அநீதிகளின் வரலாற்றாசிரியருமான சாலெ அல் ஜப்ராவி கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை நிகழ்ந்து கிட்டத்தட்ட 24 மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. மேற்குலகின் மவுனம், இம்முறையும் காது கேளாததாக உள்ளது.