ஆந்திராவில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்கும் கூகுள்
1.80 லட்சம் வேலைவாய்ப்பு
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முக்கிய நகரங்க ளில் ஒன்றான விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் பிரம்மாண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் அமைக்க உள்ளது. ரூ.1.3 லட்சம் கோடி செலவில் 2026 முதல் 2030 வரை 5 ஆண்டுகளில் இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே தனியார் நிறுவனம் முதலீடு செய்த மிகப்பெரிய தொகை இதுதான். அதே போல அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய ஏஐ மையம் ஆந்திராவில் அமைய உள்ள நிலையில், ஆசியாவில் கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில் அமைவதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த ஏஐ மையம் அமைந்தால் ஆந்திராவில் 1.80 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என செய்தி கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பிபிசிஎல் நிறுவனம் ரூ.91,000 கோடியை யும், அதானி குழுமம் ரூ.18,900 கோடி யும், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் ரூ.5,001 கோடி யும் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.