states

மேலும் ஒரு எம்.பி., ராஜினாமா பீகாரில் தள்ளாடும் நிதிஷ் கட்சி

மேலும் ஒரு எம்.பி., ராஜினாமா  பீகாரில் தள்ளாடும்  நிதிஷ் கட்சி

243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்த லின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்., 17 ஆகும்.  இத்தகைய சூழலில், தேசிய ஜனநாய கக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு ஞாயி றன்று நிறைவுபெற்றது. அதன்படி கூட்ட ணியின் இரண்டு பெரிய கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் தலா 101 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி  கட்சி (ராம் விலாஸ்) 29 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (உபேந்திர குஷ்வாகா) மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மஞ்சி) ஆகிய இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தொகுதி ஒதுக்கீடு தொ டர்பாக ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு) கட்சிக்குள் மோதல் தீவிரமடைந்துள் ளது. தொகுதி ஒதுக்கீடு மற்றும் பாஜக விற்கு அதிக தொகுதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேடியு கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்களான பூர்னி யா தொகுதியின் முன்னாள் எம்.பி., சந்தோஷ் குஷ்வாஹா, கோஷி தொகு தியின் எம்எல்ஏ ராகுல் சர்மா, பங்கா எம்.பி., கிரிதாரி யாதவின் மகன் சாணக்ய பிரகாஷ் ரஞ்சன் ஆகியோர் கடந்த வாரம் பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி முன்னிலையில் ராஷ்டிரிய ஜனதாதளத்தில் இணைந்தனர். தொடர்ந்து இதே தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஜேடியு மூத்த தலைவரும், பகல்பூரைச் சேர்ந்த சிட்டிங் எம்.பி.,யு மான அஜய் மண்டல் தனது கட்சி மற்றும் எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்வ தாக அறிவித்து, ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமா ருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நிதிஷ் குமாரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி, அவரது அலுவ லக வாசலில் அமர்ந்து அஜய் மண்டல் தர்ணா போராட்டம் நடத்தினார். கட்சிக்கு நல்லதல்ல இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் அஜய் மண்டல் கூறுகையில், “உள்ளூர் எம்.பி.,யாக இருந்த போதி லும், தொகுதி ஒதுக்கீடு செயல்பாட்டில் என்னிடம் ஆலோசனை கூட கேட்கப்பட வில்லை. இதனால் எம்.பி., பதவியில் தான் தொடர்ந்து இருப்பது அர்த்த மற்றது. இத்தொடர்பாக நிதிஷ் குமாரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சி யின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறி அல்ல” என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.