எனது அரசியல் வாழ்க்கை வெளிப்படையானது, களங்கப்படுத்த முடியாது
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி
திருவனந்தபுரம் எனது அரசியல் வாழ்க்கை வெளிப்படையானது ; களங்கப்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் திங்க ளன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மனோரமாவின் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அமலாக் கத்துறையின் சம்மனை நான் பார்க்கவில்லை. எனது மகனும் அதைப் பெற்றதாகக் கூறவில்லை. சம்மன் எங்கே வழங்கப்பட்டது? யாருக்கு வழங்கப்பட்டது? யாரோ முன்பு ஒரு குண்டு வரும் என்று கூறியிருந்தனர். ஆனால் வந்தி ருப்பது ஈரமான பட்டாசு. திரைக்குப் பின்னால் இன்னும் பல விசயங்கள் தயாராக இருக்கலாம். அப்போது அதைப் பார்ப்போம் .எனது அரசி யல் பணி பொதுவாக வெளிப்படை யானது மற்றும் களங்கமற்றது. அதனால்தான் அதை களங்கப் படுத்தும் முயற்சிகளுக்கு நான் அமைதியாக பதிலளிக்க முடிந் தது. பல முயற்சிகள் இருந்தபோ திலும், நான் அனைத்தையும் புன்ன கையுடன் கேட்டேன். சுமார் 10 ஆண்டுகளாக முதலமைச்சராக எனது பணியில் பெருமைப்பட வேண்டிய பல விசயங்கள் உள்ளன. ஊழல் சகித்துக் கொள் ளப்படாது என்ற எனது பிடிவா தத்தால், உயர் மட்டத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. எனது மகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக் கப்படாதபோது, மகனை சர்ச்சைக் குள் இழுக்க முயற்சிக்கின்றனர். சிரிப்புதான் வந்தது அரசியல் நோக்கங்களுக்காக சில நிறுவனங்களைக் கொண்டு வந்து அவர்களைத் தவறாக சித்த ரிக்க முயற்சித்தால், அது பயனற்ற தாகிவிடும். சில ஊடகங்களை பயன்படுத்தி அத்தகைய பிரச்சா ரத்தை நடத்தினால், அது எடுபடாது. நான் ஒரு களங்கமற்ற பொது வாழ்க்கையை நடத்துகிறேன். அதில் என் குடும்பம் என்னுடன் முழுமையாக இருந்தது என்பதில் பெருமைப்படுகிறேன். என் இரண்டு குழந்தைகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எனக்கு கெட்ட பெயரை ஏற் படுத்தும் எதையும் அவர்கள் செய்யவில்லை. என் மகளுக்கு எதிராக நான் பல விசயங்களை எழுப்ப முயன்ற போது, எனக்கு சிரிப்புதான் வந்தது. வேலை வீடு என குடும்பத்துடன் இருக்கும் மகனை சர்ச்சையில் இழுக்க முயன்றனர். அது அவ ரையோ அல்லது என்னையோ பாதிக்காது. முதலமைச்சரின் மக னாக, உங்களில் யாராவது அவரை எந்த அதிகாரப் பாதையிலும் பார்த்திருக்கிறீர்களா? கிளிப் ஹவுஸில் எத்தனை அறைகள் உள்ளன என்பது கூட அவருக்குத் தெரியாது. முதலமைச்சர் பதிலளிக்க வில்லை (மனோரமா செய்திக்கு) என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதைக் கேட்டேன். ஏன் பதி லளிக்க வேண்டும்? பெறாத சம்மன் குறித்து செய்தி கொடுத்தவர்க ளுக்கு மட்டுமே அது தெரியும். மனோ ரமாவுக்கும் ஒன்றிய அரசின் நிறு வனத்துக்கும் (அமலாக்கத்துறை) என்ன தொடர்பு? எத்தனை வரு டங்களாக ஊடகங்களிடமிருந்து இதுபோன்ற ‘பாசத்தை’ அனுப வித்து வருகிறேன். என் வாழ்க்கை யில் ஊழல் இருக்காது” என பின ராயி விஜயன் உறுதிபட கூறினார்.