மேற்கு வங்கத்தில் தலிபான் ஆட்சி நடக்கிறதா?
சிபிஎம் மாநிலச் செயலாளர் முகமது சலீம் கேள்வி
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். ஒரு பெண் முதலமைச்சராக இருந்தாலும், அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தா அருகே சோப்பூரில் மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டார். 3 பேர் இந்த சம்ப வத்தில் ஈடுபட்டதாகவும், குற்றவாளிகள் அனை வரும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளி யாகின. ஆனால் 5 பேருக்கு தொடர்பு இருப்ப தாக காவல்துறை மழுப்பலாகக் கூறி, மேலும் 2 பேரை கைது செய்துள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் உண்மையான விசாரணை நடை பெற்றதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஞாயிறன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில், “பாலியல் வன்மு றைச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றால், மாணவிகள் இரவில் வெளியே செல்லவேண் டாம். இதனை தவிர்த்தால் நல்லது” என சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு பெண் உரிமைக்கு எதிராக பேசிய மம்தா பானர்ஜிக்கு நாடு முழுவ தும் கண்டனம் குவிந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தலிபான் ஆட்சி நடக்கிறதா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரும், மாநில செயலாளருமான முகமது சலீம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில்,”முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுவதை பார்த்தால் மேற்கு வங்கத்தில் தலி பான் ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் ஏற் படும்படி உள்ளது. மாநிலத்தில் பெண்கள் இரவில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை, வேலைக்காக வெளியே செல்ல முடியவில்லை. மருத்துவ மாணவி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் குற்றவாளிகளைப் பாதுகாக்க மேற்கு வங்க காவல்துறை விசாரணையை முற்றிலும் குழப்பிவிட்டது. திரிணாமுல் காங்கி ரஸ் அரசின் மனநிலையும், சிந்தனைப் போக்கும் ராஜாராம் மோகன் ராய் மற்றும் வித்யாசாகர் ஆகி யோரின் சித்தாந்தத்திற்கு முற்றிலும் முர ணானது. ஆண்களும் பெண்களும் சமம் என்பதை மம்தா அரசு ஏற்கிறதா இல்லையா? ஆண்களுக்கும் இதே போல் அவர் சொல் வாரா? அனைத்து வயது பெண்களும் இப் போது மேற்கு வங்கத்தில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். மாநிலத்தில் காவல்துறையும், சட்டம்-ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டன” என அவர் குற்றம் சாட்டினார்.