சமாஜ்வாதி எம்.பி., ராஜீவ் ராய்
நாட்டில் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பத்திரிகையாளர்கள் நினைத்தால், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு க்கு எதிராக எழுதியது போல, மோடி அரசுக்கு எதிராக ஏதாவது எழுத முயற்சிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் எந்த பத்திரிகை யாளருக்கும் அப்படி எழுத தைரியமில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜேஷ் தாக்கூர்
நாட்டு மக்கள் வரிசையில் (முன்பு பண மதிப்பிழப்பு) நிற்க வேண்டும் என்றே மோடி அரசு விரும்புகிறது. அதனால் தான் இண்டிகோ விமான சேவையின் நெருக்கடி காரணமாக மக்கள் கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனர். இண்டிகோ நெருக்கடியைத் தடுப்பதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு நேர்ந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். நம்மிடம் 4 அல்லது 5 விமான நிறுவனங்கள் கூடுதலாக இருந்திருந்தால், இண்டிகோவால் ஏற்பட்ட நெருக்கடி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. இண்டிகோ நெருக்கடிக்கு மோடி அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட வேண்டும்.
ஆர்ஜேடி எம்.பி., மனோஜ் ஜா
பல தசாப்தங்களாக அமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்தின் மீதே இந்தியா-ரஷ்யா உறவு நிலைத் துள்ளது. அதனால் தேர்தல்களின் போது அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையான இந்தியா வையே உலகம் பார்க்க எதிர்பார்க்கிறது. ரஷ்ய ஜனாதி பதி புடின் பங்கேற்ற விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் களை மோடி அரசு புறக்கணித்தது துரதிர்ஷ்டவசமானது.
