tamilnadu

img

ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும் திருவள்ளூர் ஆட்டோசங்க மாநாட்டில் தீர்மானம்

ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும் திருவள்ளூர் ஆட்டோசங்க மாநாட்டில் தீர்மானம்

திருவள்ளூர், டிச.6- மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (டிச.6) நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏ.கரிமுல்லா தலைமை தாங்கினார்.மாவட்ட துணை பொதுச் செயலாளர் ஜி.சங்கர்தாஸ் வரவேற்றார். துணைச் செயலாளர் பிரபாகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.தயாளன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்து பேசினார். டிஆர்இயூ சென்னை டிவிசன் செயலாளர் சீனிவாசன், திருவள்ளூர் நிர்வாகி இளையராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் மாநாட்டை நிறைவுசெய்து பேசினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்ட தலைவராக ஏ.கரிமுல்லா, மாவட்ட செயலாளராக எம்.சந்திரசேகரன், பொருளாளராக எம்.தயாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானங்கள்  2013 ல் இருந்து உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்,  பைக் டேக்சியை தடை செய்ய வேண்டும், அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு அல்லது வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றினர்.