மேலும் 400 இண்டிகோ விமானங்கள் ரத்து புதிய விதிகளால்
டிசம்பர் 1ஆம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தி த்து வருகிறது. விமா னிகள், பணியாளர்க ளின் போராட்டம் மற்றும் இதர பிரச்ச னைகள் காரணமாக கடந்த 5 நாட்களில் இண்டிகோ நிறுவ னத்தின் உள்நாட்டு விமான சேவை கடு மையாக பாதிக்கப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய் யப்பட்டன. இந்த நெருக்கடி சனியன்றும் நீடித் தது. சனியன்று ஒரேநாளில் 400 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. சென்னை. மும்பை, தில்லி, பெங்களூரு என பல்வேறு நகரங்களுக் கான இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணி கள் கடும் அவதியடைந்துள்ளனர். அதே வேளை, இண்டிகோ விமான சேவை ரத்து மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும், விமான சேவை இயல்புநிலைக்கு திரும்ப ஒரு வார காலம் ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
