திருவொற்றியூர் 4ஆவது வார்டில் மேயர் ஆர்.பிரியா ஆய்வு
சென்னை, டிச. 6- சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா திரு வொற்றியூர் மண்டலத்திற் குட்பட்ட 4ஆவது வார்டில் நடைபெற்று வரும் பணி களை ஆய்வு செய்தார். ஜோதி நகரில் கடந்த மழை யின் போது தண்ணீர் தேங்கி நின்றதால் தண்ணீரை அகற்றுவதற்கு கூடுதலாக மழைநீர் கால்வாய் கட்டி 100 எச்பி மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மாமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார். அப்போது மேயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி 7.5 கோடி ரூபாயில் மதிப்பீடு தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதேபோல் ஜோதி நகர் பிரதான சாலை, கத்திவாக்கம் நெடுஞ் சாலை, ஆதிதிராவிடர் காலனி எட்டாவது தெரு, கிரிஜா நகர் பிரதான சாலை, மற்றும் முல்லை தெரு, முருகப்பா நகர் பாரதி தெரு ,வி பி நகர் முதல் தெரு, எர்ணிஸ்வரர் நகர் 4ஆவது குறுக்குத் தெரு, ஆகிய தெருக்களி லும் மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று மேயரிடம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் மனு அளித்தார். விரைவில் அமைக்க நட வடிக்கை எடுப்பதாக மேயர் தெரிவித்துள்ளார். இதில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி கட்டோ தேஜா, செயற்பொறியாளர்கள் பாண்டியன், பாபு, உதவி செயற்பொறியாளர் நமச்சி வாயம், உதவி பொறியாளர் திவ்யா ஸ்ரீ, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா, ஜோதி நகர் தலைவர் உதயகுமார், கிரிஜா நகர் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
