சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிக்கு அருகில் சனிக்கிழமையன்று (டிச. 6) கனரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர தடுப்பின் மீது மோதியது. ஓட்டுநரின் அதிக நேர பணிச்சுமை மற்றும் உறக்கமின்மையே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தின்போது லாரியிலிருந்து சரக்குக் கொள்கலன் சாலையில் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
