states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சபரிமலை நடை இன்று திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரி மலை நடை வெள்ளியன்று திறக் கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடை திறந்த பின்னர் விசேஷ பூஜைகள் எதுவுமின்றி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சனிக்கிழமை அதி காலை 5 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் ஐயப்பன் விக்ர கத்தில் அபிஷேகம் செய்து நெய் அபிஷே கத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். தின மும் களபாபிசேகம், கலசாபிஷேகம், இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். மார்ச் 19ஆம் தேதி சகஸ்ர கலச பூஜைக்குப் பின் சபரிமலை கோவிலின் நடை அடைக்கப்படும்.

ம.பி.,விபத்தில் 7 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தின் பத்னாவர்-உஜ் ஜைன் நெடுஞ்சாலை அருகே பாமன் சூட்டா கிராமத்தில் புதன்கிழமை அன்று நள்ளிரவு எரிவாயு டேங்கர் லாரி மீது 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின.  இந்த கோர விபத்தில் 2 கார்களில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.