சபரிமலை தங்கம் திருட்டு 21 இடங்களில் ரெய்டு சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது
செய்யப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் செவ்வாய்க் கிழமை அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தமிழ்நாட்டில் சென்னை, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் 21 இடங்களில் ஒரே சமயத்தில் அமலாக் கத்துறை சோதனை நடத்தியது. சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷ ன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரியின் வீடு, அலு வலகம் மற்றும் சபரிமலை தங்கத்தை வாங்கிய கர்நாடக மாநிலம் பெல்லா ரியை சேர்ந்த கோவர்தனின் வீடு, கேரளா வில் முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்களான பத்மகுமார், வாசுஆகியோரின் வீடுகள் உள்பட 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.