உ.பி.,யில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் சுட்டுக்கொலை
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் குற்றச் சம்பவங்க ளின் கூடாரமாக மாறி வரு கிறது. அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைச் சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லை. இந்நிலையில், அம்மாநிலத்தின் சஹா ரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நில அள வையாளரான அசோக் ராதி (40), சரஸ்வா பகுதியிலுள்ள அவர்களது வீட்டில் குடும் பத்துடன் வசித்து வந்தார். அசோக் ராதி, அவரது மனைவி அஜந்தா (37), மகன் கள் கார்த்திக் (16), தேவ் (13), அவரது தாய் வித்யவதி (70) ஆகியோர் செவ்வா யன்று காலை அவர்களது வீட்டில் ஒரே அறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல் லப்பட்ட நிலையில் சடலங்களாகக் கண் டெடுக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய் விற்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சஹாரன்பூர் காவல் துறை உயரதிகாரி அஷீஷ் திவாரி கூறு கையில், “5 பேரின் தலையிலும் துப்பாக் கிக் குண்டுகள் பாய்ந்துள்ளது. அசோக் ராதி உடலின் அருகில் 3 நாட்டுத் துப்பாக்கி கள் இருந்தன. எனினும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பதைக் கண்ட றியும் விசாரணை நடைபெற்று வருகிறது” என அவர் கூறினார்.