இடிக்கப்பட்ட வீடுகளை கட்டித்தர கோரிக்கை
கோவை, ஜன.20- சவுரிபாளையம் அருகில் உள்ள உடை யாம்பாளையம் பகுதியில் பாதாள சாக் கடை திட்டத்திற்காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடை மீண்டும் அமைக்கப்படாத தாலும், சேதமடைந்த சாலை சீரமைக்கப்படா ததாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட உடை யாம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அப் பகுதியின் பிரதான சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன. இப்பணிக ளுக்கு இடையூறாக இருந்த பேருந்து நிழற் குடை தற்காலிகமாக அகற்றப்பட்டு அப்புறப் படுத்தப்பட்டது. தற்போது பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாமல் குண்டும் குழியு மாகவே காட்சியளிக்கிறது. இதனால் இந்தப் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டி கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் அபாயம் நீடிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலை வழியே செல்லும் முதியவர்க ளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். அதேபோல், பணிகள் முடிந்தும் அப்புறப் படுத்தப்பட்ட பேருந்து நிழற்குடை இதுவரை மீண்டும் அந்த இடத்தில் வைக்கப்பட வில்லை. இதன் காரணமாக, பேருந்துக் காகக் காத்திருக்கும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெயிலி லும், குளிரிலும் சாலையோரம் நின்றிருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “பணிகள் முடிந்து நீண்ட நாட் களாகியும் சாலையைச் சீரமைக்க மாநக ராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. அகற்றப் பட்ட நிழற்குடையைக் கொண்டு வந்து பொருத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமப்படுகின்ற னர்” எனத் தெரிவித்தனர். எனவே, மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு சேதமடைந்த சாலையைச் சீரமைப்பதோடு, பேருந்து நிழற்குடையை மீண்டும் அமைத் துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
