பல்கலைக்கழகங்களில் சாதியப் பாகுபாடு யூஜிசி அறிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு
2016ஆம் ஆண்டு சாதியப் பாகு பாட்டால் ஹைதராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன் றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு வான யூஜிசி (UGC) தரவுகளைச் சமர்ப்பித் தது. அதில்,“கடந்த 5 ஆண்டுகளில் இந்தி யாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவ னங்களில், சாதியப் பாகுபாடு தொடர் பான புகார்கள் 118% அதிகரித்துள்ளது. 2023-24 கல்வி ஆண்டில் இந்த எண்ணிக்கை 378 ஆக உயர்ந்துள்ளது” என அதில் கூறப் பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழகங் களில் சாதியப் பாகுபாடு புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக யூஜிசி தெரி வித்துள்ள புள்ளிவிவரங்கள் தவறானவை என நாடுமுழுவதும் கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.