ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய நாட்டின் வரலாற்றை கொச்சைப்படுத்துகிறார். அவர் தனது பொய்யான கூற்றுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதையும், சுதந்திரத்துக்கான தியாகத்தை இழிவுபடுத்துவதையும் நாங்கள் ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவசக் கல்வி, இலவச மின்சாரம், இலவச மருத்துவ சிகிச்சையை நிறுத்தி விடுவார்கள். தில்லி மக்களுக்காக பாஜக அறிவித்துள்ள 2 வாக்குறுதி அறிவிப்புகளை நம்புவது தில்லிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஆபத்தானது.
டிரம்பின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் தனக்கு “முதல் வரிசை” கிடைத்ததாக முட்டாள்தனமான கூற்றை முன்வைப்பது ஏன்?
பாஜக இன்னும் 2024 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் செலவு அறிக்கையை இன்னும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அரசியல் கட்சிகள் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
த குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி போராட்டம் நடத்தப்படும் என்று பஞ்சாப் - ஹரியானா மாநில விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தனது கோரிக்கையை அதிகாரிகள் கேட்கவில்லை எனக் கூறி ஒருவர் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே தனது வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்தினார்.
கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைப் அலிகான் செவ்வாயன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் செவ்வாயன்று பாஜகவில் இணைந்தனர்.