திருவனந்தபுரம், ஜன. 21 - 2025 ஆம் ஆண்டிற்கான யுஜிசி-யின் வரைவு வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. முன்னதாக, இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், “யுஜிசி வரைவு விதிகள், கூட்டாட்சிக் கோட்பாட்டி ற்கு புறம்பாக உள்ளது; அரசியலமைப்பின் உணர்வை அது பிரதிபலிக்கவில்லை என கேரள சட்டப்பேரவை மிகத்தெளிவாக கருதுகிறது” என்று குறிப்பிட்டார். ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை! “பல்வேறு மாநிலங்களில் உள்ள பல் கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களின்படி செயல்படுகின்றன. அரசியலமைப்பின் ஏழாவது அட்ட வணையானது, பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் மேற்பார்வையிடு வதற்குமான அதிகாரத்தை மாநில அரசாங்கங்களிடமே வழங்கியுள்ளது. 1977-ஆம் ஆண்டின் 42-ஆவது அரசிய லமைப்புத் திருத்தம், உயர்கல்வி உள்ளிட்ட கல்வியை ஒத்திசைவுப் (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியலுக்கு மாற்றினாலும், உயர் கல்விக்கான தரங்களை ஒருங்கிணைத்து நிர்ணயிப்பதில் மட்டுமே ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டி னார்.
மாநிலங்களை கேட்காமலேயே விதிகளை வகுப்பதா?
ஆனால், இந்த உண்மைகளைப் புறக்கணித்து, மாநில அரசாங்கங்களுடன் விவாதிக்காமல், துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசுகளின் கருத்துகளை முற்றிலும் விலக்கிவிட்டு, வரைவு வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், பல்கலைக்கழ கங்களின் ஜனநாயக செயல்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்கு தேவை யற்ற அதிகாரத்தைக் கொடுக்கின்றன; உயர்கல்வி நிறுவனங்களுக்கான நிதியில் 80 சதவிகிதத்தைப் பங்களிக்கும் மாநிலங்களின் உரிமையை முற்றிலுமாக ஓரங்கட்டுகிறது.
உயர்கல்வியை வணிகமயமாக்கும் திட்டம்
அதேபோல கல்வித்துறை வல்லுநர்களையும் கருத்தில் கொள்ளாமல், தனியார் துறையைச் சேர்ந்தவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கும் யுஜிசி வழிகாட்டுதலானது, ‘உயர்கல்வித் துறை யை வணிகமயமாக்கும் நடவடிக்கையாகும்’ என்று பினராயி விஜயன் விமர்சித்தார். மேலும், “உயர்கல்வித் துறையில் ஜனநா யக விழுமியங்களை அழித்து, உயர்கல்வி நிலையங்களை ‘மத மற்றும் வகுப்பு வாதக் கருத்துக்களைப் பரப்புபவர்களின் கட்டுப்பாட்டிற்குள்’ கொண்டு வருவ தற்கான நகர்வுகளின் ஒரு பகுதியாகவே 2025-ஆம் ஆண்டிற்கான யுஜிசி வரைவு விதிமுறைகளைப் பார்க்க முடிகிறது” என்று குற்றம் சாட்டினார். விதிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும், யுஜிசியும் எடுத்துள்ள நிலைப்பாடு ஜனநாயக விரோதமானது; அது திருத்தப்பட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவை கருதுகிறது என்ற முதல்வர் பினராயி விஜயன், “2025-ஆம் ஆண்டுக்கான யுஜிசி வரைவு விதிகளை உடனடியாக திரும்பப் பெறவும், மாநில அரசுகள் மற்றும் கல்வித்து றை நிபுணர்களின் கருத்துகள் மற்றும் கவலைகளை பரிசீலித்து, அனைத்துத் தரப்பினருடனும் விரிவான விவாதங்களை நடத்தி அவர்களின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொண்ட பின்னரே, புதிய விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று கேரள சட்டப்பேரவை ஒருமனதாக ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறது” என்றும் தெரிவித்தார்.