பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூரின் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் ஜனவரி 19ஆம் தேதி இரவு 11 மணியள வில் யேலஹங்கா செல்லும் பேருந்துக் காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கிருந்த நபரிடம் பேருந்து வருகின்ற நேரம் குறித்து விசாரித்துள்ளார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் பேருந்து நிற்கும் வேறு நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஒரு குடோனிற்கு பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். குடோனில் உள்ள தனது ஆட்களுடன் பெண்ணை 3க்கும் மேற்பட்டவர்கள் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பெண்ணிடம் இருந்த பணம், நகை உள்ளிட்டப் பொருட்களை அந்த கும்பல் திருடியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார ளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஜனவரி 19ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. எனினும் 2 நாட்களுக்குப் பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை எத்தனை பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.