மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி மீது ஆர்எஸ்எஸ் தாக்குதல் முயற்சி
மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி மீது ஆர்எஸ் எஸ் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு எதிராக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரையில் நடந்த இந்த வன்முறைக்கு காரண மான குற்றக் கும்பலை உடனடி யாகக் கைது செய்ய வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்த மக்கள் துரோகிகள், விமர் சகர்களையும் எதிர்ப்பாளர்களை யும் வேட்டையாடுவது ஒரு பாசிச அரசை நிறுவுவதற்கான முயற்சி யாகும்.
இந்தியத் தந்தை மகாத்மா காந்தியைக் கொன்ற போதிலும், அவர் மீது வெறுப்பு கொண்ட ஆர்.எஸ்.எஸ்., காந்தியின் பேர னையும் வேட்டையாடுகிறது. இதை வேடிக்கை பார்ப்பது சாத்தி யமில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருவனந்தபுரம் மாவட்டத் தலைவர் டாக்டர் சிஜு கான் தெரிவித்துள்ளார். வர்க்கலா சிவகிரியில் மகாத்மா காந்தி- நாராயண குரு உரையாடலின் 100ஆவது ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்க துஷார் காந்தி கேரளம் வந்தார்.
அதையொட்டி மறைந்த காந்திய வாதி கோபிநாதன் நாயரின் சிலை திறப்பு விழாவிற்கு அவர் வந்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது. தங்களுக்கு எதிரான அனைத்து விவாதங்களையும் முடி வுக்குக் கொண்டு வந்து சர்வாதி காரத்தை அமல்படுத்த ஆர்எஸ் எஸ் முயற்சிக்கிறது. இந்த வன்முறைக்கு நெய்யாற்றின்கரா நகராட்சியின் ஆர்எஸ்எஸ் தலை வரும் பாஜக கவுன்சிலருமான மகேஷ் தலைமை தாங்கினார். வட இந்தியாவில் ஆர்எஸ்எஸ் செயல்படுத்தும் வன்முறைகளை இங்கும் செயல்படுத்தும் எந்த வொரு முயற்சியையும் கடுமை யாக எதிர்க்கும் என்று வாலிபர் சங்க மாவட்டக் குழு அறிவித்துள் ளது. நாட்டின் ஆன்மா புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், சங் பரிவார் இந்த புற்று நோயைப் பரப்புகிறது என்றும் துஷார் காந்தி கூறியதால் ஆர்.எஸ்.எஸ். கோபமடைந்தது. இந்த உரையை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்குமாறு துஷார் காந்தியை ஆர்.எஸ்.எஸ் மிரட்டுகிறது. ஆனால், இந்த மிரட்ட லுக்கு அஞ்ச மாட்டேன் என துஷார் காந்தி தெரிவித்தார்.