கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே மீன் முட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் காபி தோட்டத்தில் காப்பி பறிக்கும் பணி யில் ஈடுபட்ட போது புலி தாக்கியதில் ராதா (48) என்ற பழங்குடியின பெண் உயிரிழந்தார். தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வயநாடு சரக வனத் துறை அதிகாரிகள் விசாரணையில் ராதா புலி தாக்கி உயி ரிழந்ததை உறுதிப்படுத்தி, அவரது உட லை பிரேதப் பரிசோதனை செய்ய வய நாடு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது மீன்முட்டி கிராம மக்கள் புலி யை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணுக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில், “புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கும். வனவிலங்கு தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண அரசு கடுமையாக பாடு படுகிறது” என அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார். கேரள வனத்துறை அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீன்முட்டி கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.