states

img

தில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் அகற்றம்

தில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் அகற்றம்

சமீபத்தில் நிறைவு பெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற பதவியேற்பு விழா வில் முதலமைச்சராக ரேகா குப்தா வும், துணை முதலமைச்சராக பர்வேஷ் வர்மா மற்றும் 5 அமைச் சர்கள் பொறுப்பேற்றனர். எதிர்க் கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான அதிஷி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சட்டமன்ற தேர்த லுக்கு பின் திங்களன்று தில்லி சட்ட மன்றம் கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, ஆம் ஆத்மி எம்எல் ஏக்கள் பொறுப்பேற்றனர்.

இத்த கைய சூழலில் தில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத் கர் மற்றும் பகத்சிங்கின் புகைப் படங்களை புதிதாக பொறுப்பேற்ற பாஜக அரசு அகற்றியுள்ளது. தற்போது தில்லி முதலமைச்சர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட 3 படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர், பகத்சிங்கின் புகைப் படங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி எம் எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். ஆம் ஆத்மி கண்டனம் தில்லி முதல்வர் அலுவலகத் தில் முந்தைய முதல்வர் வைத்தி ருந்த அம்பேத்கர் மற்றும் பகத்சிங் கின் புகைப்படங்களை தற்போ தைய அரசு அகற்றியுள்ளதாக முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித் தலைவருமான அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முகலாய பெயர்களை மாற்றவே  பாஜக ஆட்சிக்கு வந்ததா?

மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தி யப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் மற்றும் முகலாய பெயர்கள் கொண்ட சாலைகள், தெருக்களின் பெயர் களை பாஜக மற்றும் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றி யது. தற்போது தில்லியிலும் முஸ்லிம், முகலாய பெயர்கள் கொண்ட  சாலைகள், தெருக்களின் பெயர்களை மாற்ற புதிதாக பொறுப் பேற்றுள்ள பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. மக்களுக்கு நல்லது செய்ய ஆட்சியை கைப்பற்ற வில்லையா? முகலாய பெயர்களை மாற்றவே ஆட்சிக்கு வந்தீர்களா?  என பாஜகவிற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,”பாஜக இன்று தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தை நாட்டுக்குக் காட்டியுள்ளது. ஆட்சி க்கு வந்தவுடன் முதலமைச்சர் அலு வலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்களை அகற்றியுள்ளனர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கைவிட பிரதமர் மோடி உயர்ந்தவர் என்று பாஜக நினைக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.