states

img

மணிப்பூர் பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

இம்பால் மணிப்பூரில் பாஜக அரசு க்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மணிப்பூர் தேர்தலில் ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஆறு பேரில் 5 பேர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். தற்போது அக்கட்சிக்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளார். இந்நிலையில் தான் ஆதரவை வாபஸ் பெறுவ தாக நிதிஷ்குமார் அறிவித்துள் ளார்.   மணிப்பூரில் இனக் கலவ ரம் நடந்து பலர் படுகொலையான போது கூட பாஜகவிற்கு எதிராக வாய் திறக்காத நிதிஷ்குமார், பிப்ர வரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாஜகவிடம் தனது மாநிலத்திற்கு அதிக நிதியை பெறும் நோக்கத் தில் இவ்வாறு ஆதரவு வாபஸ் என்ற முறையில் பயமுறுத்த முயற் சிக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.