districts

img

மாற்றுத்திறனாளிகள் மறியல்

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக்கோரி செவ்வாயன்று (ஜன.21) தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மாயவன் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்க கோரி செவ்வாயன்று (ஜன.21) சேத்துப்பட்டு சிக்னலில் மாற்றுத்திறனாளிகள் மறியல் ஈடுபட்டனர். மத்தியசென்னை மாவட்டத் தலைவர் த.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, பொருளாளர் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் நடராஜன், ஜெயந்தி, சசிகுமார், சாரதி, ஜெ.ரவி, ஆறுமுகம், உமா மகேஸ்வரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.