districts

img

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பாதுகாப்பு விருது

சென்னை, ஜன. 22-  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (என்எஸ்சிஐ), 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க ‘சுரக்ஷா புரஸ்கார்’ வெண்கல விருதினை பெற்றுள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியா வழங்கும் இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்ட பணிகள் நடைபெறும் கட்டு மான தளங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த பாது காப்பு செயல்திறனுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறிப்பாக, சென்னை கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து பாரதிதாசன் சாலை மெட்ரோ நிலையம் வரையிலான சுரங்கம் ஒன்று என்ற தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டு மான பணிகளை ஐடிடி சிமென்டேஷன் இந்தியா என்ற நிறுவனம் கட்டமைத்து வருகின்றது.