districts

img

திருத்தணியில் இலவச பேருந்து சேவை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

திருத்தணி, ஜன,22- பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு செல்லும் இலவச பேருந்து சேவையை அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ. வேலு, நாசர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து, சிறுவாபுரி கோயிலுக்கு செல்வதற்காக புதிய வழித்தடம் அமைப்ப தற்கான இடத்தை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சா் எ.வ.வேலு ”சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாற்றுப்பாதையாக 4 வழிச்சாலையை ரூ. 45 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்ட மிட்டுள்ளோம். இந்த 4 வழிச்சாலைக்கான பணிகளை 6 மாதங்களில் முடிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. 4.6 கி.மீ. நீளத்திற்கு அமையவுள்ள இந்த சாலைக்காக 12 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய சாலையால் சிறுவா புரி முருகன் கோவிலுக்கு செல்வது எளி தாகும்.” என்று தெரிவித்தார்.