பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்
சென்னை, ஜன.22- சென்னையில் அமைந்துள்ள பிரபல பொழுது போக்கு பூங்காவில் சுற்றுலா வந்த இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான தீம் பார்க்கிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், விடு முறை மற்றும் விழா நாட்களில் ஆயி ரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களை பொழுது போக்கு பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் விளையாடிக் கொண்டி ருந்த போது, சிறுமிகள் இருவரும் இறுதி யாக நீர் சறுக்கில் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, விளையாடும் நபர்களை தண்ணீரில் இருந்து மேலே அனுப்ப, அப்பகுதியில் பூங்கா ஊழியர் ஒருவர் பணியில் இருப்பது வழக்கம். அப்படி, அந்த பகுதியில் சென்னை பனையூரைச் சேர்ந்த சுரேந்தர் (வயது 31) என்ற இளைஞர் பணியில் இருந்துள்ளார். அப்போது, தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளிடம் அவர் பாலி யல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதனால் சிறுமிகள் அங்கே கூச்சலிட்டு தாயிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர்கள் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த சம்பவம் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை விசாரணை செய்த நீலாங்கரை காவல்நிலையத்தினர், போக்சோ வழக்கு என்பதால், அதை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் விசா ரணை மேற்கொண்ட ஆய்வாளர் ராஜேஸ்வரி, ஊழியர் சுரேந்தரை கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது நடத்திய விசாரணையில், புகாரில் குறிப்பிட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னையில் இன்று மின் தடை செய்யப்படும் பகுதிகள்
சென்னை, ஜன,22- சென்னையில் நாளை பராமரிப்பு பணி கள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், அத்திப்பட்டு புதுநகர்: அத்திப்பட்டு புதுநகர், மின்தடை செப்பாக்கம், மௌத்தம்மேடு, கே. ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப் பள்ளி இண்டஸ்டிரியல், தமிழ் குறஞ்சி யூர், நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரை யான்மேடு. பூந்தமல்லி நகராட்சி முழுவதும், சென்னீர்குப்பம் முழுவதும், கரயான்சாவடி முழுவதும், துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி முழுவதும் மின் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் சேவை
சென்னை, ஜன.22- சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டிக்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி20 விளை யாடுகிறது. கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பையில் என மொத்தம் 5 போட்டிகளில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை நடை பெற்றது. அதேபோல இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் வரும் சனிக்கிழமை (ஜன.22) நடக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போட்டிக்கான டிக்கெட்டு கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்த நிலை யில், இந்தியா-இங்கிலாந்து இடை யேயான 2ஆவது டி20 போட்டியின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ளது. இப்போட்டிக்கு டிக்கெட் வைத்தி ருப்பவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அச் சங்கம் அறிவித்துள்ளது.
மூதாட்டியிடம் நூதன முறையில் திருட்டு
திருவள்ளூர், ஜன.22- திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கம்மார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீகாந்தம் (69). இவரது கணவர் பி.சின்னப்பன். இவர்களுக்கு ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூதாட்டிக்கு இடது கையில் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திருவள்ளூர் இந்திரா நகரில் உள்ள மகன் சந்திரசேகர் வீட்டில் தங்கி நாள்தோறும் மருத்துவமனைக்கு சென்று வந்தார். எலக்ட்ரிக் ஷாக் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையை கடந்த சில நாட்களாக பெற்று வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று (ஜன 21), காலை வழக்கம் போல் 11.30 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி சிகிச்சை முடிந்து 1.30 மணி அளவில் மருத்துவமனை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னல் வந்த 30 வயது இளைஞர் மருத்துவர் அழைப்பதாக கூறியுள்ளார். ஆதார் கார்டு இணைக்க வேண்டும் எனக் கூறி மூதாட்டி கையில் வைத்திருந்த ரசீதை வாங்கி அதில் கைநாட்டு பெற்றுள்ளார். இதனை யடுத்து டாக்டர் ஸ்கேன் எடுக்க சொன்னார். அதனால் நகையை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் மூதாட்டி கழுத்தில் அணிந்தி ருந்த நான்கு சவரன் செயினை கழற்றி பையில் போட்ட போது அதை வாங்கி கையில் வைத்துக் கொண்ட அந்த இளைஞர் மூதாட்டியை ஸ்கேன் செய்யும் அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து நைஸாக நழுவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டு வதற்குள் அந்த இளைஞர் மாயமானார். இது குறித்து மருத்துவமனையில் காவலர்கள் யாரும் இல்லாததால் கேட் அருகே உள்ள காவலரிடம் சம்பவம் குறித்து அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் சிறப்பு ரயில்
சென்னை, ஜன.22- இந்தியா- இங்கிலாந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக வரும் ரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் செல்வதற்காக 25ஆம் தேதி சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் இரவு 9.50 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மற்றொரு ரயில் இரவு 10.20 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். வேளச்சேரியிலிருந்து அன்றைய தினம் இரவு 10 மணிக்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில், இரவு மணி 10.27 முதல் 10.37 வரை 10 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்ட அலுவலகம் அறி வித்துள்ளது.
4 வருடமாக கண் இமையை திறக்க முடியாமல் அவதிப்பட்ட நபர் சென்னையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை
சென்னை, ஜன.22- கடந்த நான்கு வருடங்களாக கண் இமை களை திறக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்த நபருக்கு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சை மறுவாழ்வை பெற்றுத்தந்துள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இந்திய வனத்துறை அதிகாரியின் வாழ்க்கையை இந்த அறுவை சிகிச்சை மாற்றியுள்ளது. ஒரு காலத்தில் தடகள வீரராகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த அவரால், தனது அன்றாட பணி களை செய்வதில் கூட சிரமம் ஏற்பட்டது. வெளியில் நடப்பது அல்லது படிக்கட்டு களில் ஏறுவது போன்ற அடிப்படை வேலைகளைக் கூட பிறர் உதவியின்றிச் செய்ய முடியவில்லை. கண் இமைகளின் கடினத் தன்மை காரணமாக, கண்களை அவரால் திறக்க முடியவில்லை. இதனால் அவர் நம்பிக்கை இழந்ததோடு மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதை தவிர்த்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். உலகின் மிகவும் அரிதான கண் இமைகளில் நரம்பி யல் பிரச்சினையான பெனைன் எசென்ஷி யல் பிளெபரோஸ்பாஸ்ம் உடன் கண்கள் திறப்பதை கடினமாக்கும் ஐலிட் அப்ராக்ஸியா நோயால் அவர் அவதிப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளில், அவரும் அவரது மனைவியும் நாடு முழுவதும் 12க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் உள்ள கண் சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று போட்லினம் டாக்சின் ஊசிகள் மற்றும் அறுவை சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளையும் செய்தனர். இருப்பினும் அவரது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இவருக்கு சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு டாக்டர் ரவீந்திர மோகன் தலைமையிலான குழுவினர் 4 மணிநேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சை வெற்றிபெற்றுள்ளது. இது குறித்து டாக்டர் ரவீந்திர மோகன் கூறுகையில், கண் இமை அறுவை சிகிச்சையில் கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்த மிகவும் சிக்கலான மருத்துவ சவால்களில் இதுவும் ஒன்றாகும். கட்டுப்படுத்த முடியாத கண் இமை பிடிப்பு களுடன் கண்களை தானாக முன்வந்து திறப்பதை கடினமாக்கும் ஒரு நிலையும் அந்த நோயாளிக்கு இருந்தது. இரண்டு நிலை களையும் ஒன்றாக பாதுகாப்பான முறையில் நவீன சிகிச்சை முறையில் நிவர்த்தி செய்த அவரை குணப்படுத்தி உள்ளோம் என்றார்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை, ஜன.22- சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில அனு மதிக்கப்பட்டுள்ளார். கைதான ஞானசேகரனிடம் சோதனை யில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருந்தனர். 7 நாட்கள் போலீஸ் காவல் இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசா ரணை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன் முன் வந்தது. ஞானசேகரனிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். பின்னர் சிறப்பு புலனாய்வு குழு கோரிய 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஞானசேகரனிடம் திங்கட்கிழமை இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசா ரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் செவ்வாயன்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு ஞான சேகரனிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஞானசேகரன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் விசாரணையில் உள்ள ஞானசேகரனுக்கு அதிகாலையில் வலிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் சேர்க்க உதவிய கடலூர் ஆட்சியர்
கடலூர், ஜன.22- கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடலூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு, கழிப்பிடத்திற்கு வெளியே வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மோகன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் உடனடியாக அவரை வட்டாட்சியர் வாகனத்தில் ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிருக்கு போராடிய நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியையும் அங்கிருந்து பொதுமக்களிடம் பாராட்டையும் பெற்றுள்ளது.