states

img

ஹசீனாவை சர்வதேச அமைப்பின் உதவியுடன் நாடு கடத்த வங்கதேசம் திட்டம்

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரத மர் ஷேக் ஹசீனாவை சர்வதேச அமைப்புகளின் உத வியுடன் நாடு கடத்தி வருவோம் என வங்க தேச இடைக்கால அரசு தெரிவித்துள் ளது. இடைக்கால அர சின் சட்ட ஆலோசக ராக உள்ள ஆசிப் நஸ்ருல் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீ னாவை நாடு கடத்த சட்டரீதியாக கடிதம் எழுதியுள்ளோம். இந்தியா அவரை ஒப்படைக்கவில்லை என்றால் அது இந்தியா வங்கதேசத்துக்கு இடையில் ஏற்கனவே அமலில் உள்ள கைதிகள் பரிமாற்ற/ ஒப்படைப்பு  ஒப்பந்தத்திற்கு விரோதமான செயலாக மாறும். நாங்கள் சர்வதேச அமைப்புகளின் உதவி யுடன் அவரை நாடுகடத்துவோம் என தெரி வித்தார்.  யூனுஸ் தலைமையிலான வங்க தேச இடைக்கால அரசு ஷேக் ஹசீனா  மற்றும் அவரது அவாமி லீக் கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளது. கடந்த ஆண்டே அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து அவரை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவை வலி யுறுத்தத் துவங்கியது. எனினும் இந்தியா அதற்கு பதில் எதுவும் தரவில்லை. மாறாக ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.