states

img

நான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுக்க கேரள முதல்வர் உறுதி

கேரளத்தில் எர்ணாகுளம் புத்தன் வெளிகராவில் நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறையினர் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்வார்கள் என்றும் முதல்வர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்குப் பதில ளித்து முதலமைச்சர் இதனைத் தெரி வித்தார். எர்ணாகுளம் புத்தன்வெளிகராவில் நான்கு வயது சிறுமியை அவளது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணியன் பாலியல் வன்கொடுமை செய்த வழக் கில், செங்கமநாடு காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்ட னைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை ஆலுவா நீதித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பல துறைகளை இணைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான சந்தேக நபரை கைது செய்ய தீவிர விசாரணை நடை பெற்று வருகிறது. சந்தேக நபர் மற்றும் அவரது உறவினர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்க ளில் குற்றவாளிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும் வழங்கும் அணுகு முறை அரசாங்கத்திடம் இல்லை. இந்த  வழக்கிலும், குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டு, அதிகபட்ச தண்டனை வழங்கப் படும். “இந்த விசயத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் படும் என்று நான் உங்களுக்கு உறுதிய ளிக்கிறேன்” என்று முதல்வர் கூறினார்.