அமெரிக்க ெள்ளத்திற்கு வருந்தும் மோடி, இமாச்சலை கண்டுகொள்ளவில்லை
இமயமலைச் சாரலில் உள்ள இமாச் ்சல பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் நிகழ்ந்த மேகவெ டிப்பு மற்றும் கனமழை காரணமாக 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள னர். 30க்கும் மேற்பட்டோரை காண வில்லை. 100க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர். குறிப்பாக கனமழை யால் மண்டி மாவட்டம் மிக மோசமான அளவில் உருக்குலைந்து, இயல்பு நிலையை இழந்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் மண்டியில் மோடி அரசு எவ்வித உதவியும் மேற் கொள்ளவில்லை. மண்டியைப் போல அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட கன மழையில் சிக்கி, 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெக்ஸாஸ் மாகாண வெள்ளச் சேதத்திற்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். ஆனால் இமாச்சலின் மண்டி வெள்ளப் பாதிப்பிற்கு பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் அமைச்சர் இல்லை ; நிவாரணம் தர முடியாது பாஜக சார்பில் மண்டி நாடாளு மன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., யாக இருப்பவர் நடிகை கங்கனா ரனா வத். இவர் திங்களன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மண்டி பகுதியை நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியா ளர்கள்,”உங்கள் சொந்த தொகுதிக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்து என்ன கூறப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு கங்கனா,”எனக்கு அமைச்ச ரவை ஏதும் வழங்கப்படவில்லை. அதனால் இந்த மக்களுக்கு பெரிதாக நிவாரணம் வழங்க முடியாத இடத்தில் இருக்கிறேன்” என சிரித்தபடி பதில ளித்தார். நான் அமைச்சர் இல்லை; நிவாரணம் தர முடியாது என வெளிப்ப டையாக கூறிய கங்கனா ரனாவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.