யுஜிசி வரைவு விதிமுறைகள் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே மிகக் கடுமையான மோத லை ஏற்படுத்துகின்றது. பாஜக கூட்டணி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களும் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த சவாலை எதிர்கொள்கின் றன. இது கல்வியில் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை திணிக்கும் பாஜகவின் கருத்தியல் திட்டமாகும்.
மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இன்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) வாபஸ் பெற்றது. நேற்று பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்த மோடி அரசால் அறிவிக்கப்பட்ட புதிய யுஜிசி விதிகளை எதிர்த்தது. இது அரசியல் காலநிலை மாற்ற முன்னறிவிப்பா?
தில்லியின் பள்ளிகளை மேம்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இவர்கள் வெற்றி பெற்றால் தில்லியின் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு அப்பள்ளி நிலங்களை அவர்களின் நண்பர்களுக்குக் கொடுப்பார்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும்.
பிஎம் கேர்ஸ் தணிக்கை அறிக்கைகள் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு நிதியாண்டு தணிக்கை அறிக்கைகளுடனும் இணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் பதிவேற்றப்படவில்லை. ஏன்?