states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நேதாஜி பேரன் சந்திர குமார் போஸ்

பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் என்ற தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது மேற்கு வங்க மக்களுக்குக் கடும் இன்னல்களைத் தருவதாக உள்ளது. எஸ்ஐஆர் பணி மிகவும் அவசரமாகவும், முறையான திட்டமிடல் இல்லாமலும் செயல்படுத்தப்படுகிறது. 

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்

அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் வழக்குக்கான சம்மன்களை மோடியின் அரசாங்கம் 14 மாதங்களாக அதானியிடம் கொடுக்க மறுத்து வருகிறது. மின்னஞ்சலில் சம்மனை அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. டிரம்ப்பை எதிர்த்து எதுவும் பேசாமல், எல்லாவற்றுக்கும் டிரம்ப்பிடம் மோடி சரணடைய அதானி வழக்கு தான் முக்கிய காரணம் ஆகும்.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் (மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது) பத்திரிகையாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். மக்களின் பிரச்சனைகளுக்காக குரலெழுப்பும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் பானு

கோடி மீடியாவின் ஏபிபி நியூஸ் பத்திரிகையாளர் சித்ரா திரிபாதியை, ஒரு சிறிய செய்தி நிறுவன பத்திரிகையாளர்,“நீங்கள் ஒரு மைனர் சிறுமியின் வீடியோவைத் திரித்து வெளியிட்டீர்கள்” என்று கூறினார். உடனே சித்ரா,“கன்னத்தில் அறை விடுவேன்” என்று மிரட்டுகிறார். பொய்ச் செய்திகளும், மிரட்டல்களும் தான் பாஜக ஆதரவு கோடி மீடியாக்களின் வேலை.